திருத்தணியில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு
திருத்தணியில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாதந்தோறும் 2-வது வியாழக்கிழமை அரக்கோணம் சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story