விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு


விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நாளை மறுநாள் நடக்க இருந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களை முன்னிட்டு இக்கூட்டம் வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமையில் நடக்கிறது. எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story