அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2023 6:02 AM GMT (Updated: 2 Aug 2023 7:13 AM GMT)

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

வழக்கில் 80 சதவிகிதம் விசாரணை முடிந்த நிலையில் தங்களையும் இணைக்க கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதன்படி, அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வழக்கின் விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story