குடியேறும் போராட்டம் ஒத்திவைப்பு


குடியேறும் போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குடியேறும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அடுத்த மடப்புரம் குரூப்பில் பட்டியலின மக்கள் 14 பேருக்கு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாளை (சனிக்கிழமை) குடியேறும் போராட்டம் அறிவித்திருந்தனர். இது தொடர்பான சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் தாசில்தார் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிவகங்கை ஆதிதிராவிடர் நலன் தனி வட்டாட்சியர் உமாமகேஸ்வரி, திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் முத்துராமலிங்கபூபதி, செயலாளர் வீரய்யா, துணை தலைவர் முருகானந்தம், பூவந்தி ஊராட்சி துணை தலைவர் மகாலிங்கம், கரும்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், மடப்புரம் குரூப்பில் உள்ள நிலத்தில் பட்டா வழங்கப்பட்டும், தள்ளுபடி செய்யப்பட்டுள்ள 8 நபர்களுக்கு மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் நில அளவை செய்து பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story