முதுநிலை மாணவிகள் சேர்க்கை
வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் முதுநிலை மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம் படிப்பிற்கான மாணவிகள் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று (வியாழக்கிழமை) மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடைபெறுகிறது. நாளை சிறப்பு பிரிவிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் விதவைகள், விளையாட்டு வீரர் தேசிய மாணவருக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. 11-ந் தேதி பொது பிரிவினருக்கான சேர்க்கை நடக்கிறது.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் பூங்குழலி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story