பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சேவை மையம் தொடக்கம்


பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை  வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சேவை மையம் தொடக்கம்
x

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சேவை மையம்

தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஆலோசனை சேவை மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றவும் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி கடைசிநாளாகும். இந்த சேவை மையம் வாயிலாக (ஜூலை) 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சான்றிதழ்களை சரிபார்க்கலாம். அதைத்தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

கலந்தாய்வு

இதையடுத்து (ஆகஸ்டு) 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பின்னர் 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 14-ந் தேதி வரை பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

இதையடுத்து (அக்டோபர்) 15 மற்றும் 16-ந் தேதிகளில் துணை கலந்தாய்வும், 17 மற்றும் 18-ந் தேதிகளில் எஸ்.சி. (காலியிடம்), எஸ்.டி. பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 18-ந் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

இந்த மையத்தில் பொறியியல் படிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள், எந்த துறையை தேர்வு செய்தல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் மாணவர்கள் இந்த மையத்தின் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய கட்டணம் செலுத்தி இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்றனர்.


Next Story