ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை


ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 11 May 2023 1:15 AM IST (Updated: 11 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நாகை மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய 2 பல்கலைக்கழக படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் வசதியை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி தொடங்கி வைத்தார். இதுகுறித்து துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வேளாண்மை இளங்கலை படிப்பில் மொத்தம் 2 ஆயிரத்து 670 இடங்கள் உள்ளன. மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com மற்றும் http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(இஸ்லாமியர்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.500மற்றும் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.250 ஆகும். மாணவர்கள் இணையதள விண்ணப்பங்களை அடுத்த மாதம்(ஜூன்) 9-ந் தேதி வரை பூர்த்தி செய்து வழங்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதள முகவரியில்(www.tnau.ac.in.) மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளன. கலந்தாய்விற்குரிய தேதி மற்றும் அதற்குரிய செயல்முறைகள் அனைத்தும் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியடப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதியை அவர் தொடங்கி வைத்தார்.


Next Story