டி.ராஜேந்தர் ஆஸ்பத்திரியில் அனுமதி; தனி விமானம் மூலம் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்

சினிமா டைரக்டர் டி.ராஜேந்தருக்கு நேற்று ‘திடீர்’ நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
சென்னை,
திரைப்பட டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு 'திடீர்' உடல்நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அமெரிக்கா பயணம்
டி.ராஜேந்தர் உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றுக் குள் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை தனி விமானம் மூலம் அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவருடன் மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன், மகள் இலக்கியா ஆகியோரும் அமெரிக்கா செல்கிறார்கள்.
Related Tags :
Next Story






