பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை


பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

மாணவர் சேர்க்கை

2023-2024-ம் கல்வியாண்டில் 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 13 பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 445 இடங்களுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. மாணவ - மாணவிகள் 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குழுவால் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

4-ம் வகுப்பு முதல் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் 85 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் 10 சதவீதம், பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நிபந்தனை

பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவருக்கு கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இ.எம்.ஐ.எஸ். எண் மற்றும் மத்திய, மாநில அரசால் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story