அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்


அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:25 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க சபதம் உள்பட மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை

மதுரை

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க சபதம் உள்பட மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

32 தீர்மானங்கள்

மதுரை அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டில் மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

1. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், இந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

2. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும் தெரிவிப்பது.

அரசியல் வாரிசு

3. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நல்லாட்சியை தந்தார். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து செயல்பட்டு வரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவிப்பது.

4. அ.தி.மு.க.வுக்கு 2 கோடிக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்த மாவட்ட, மாநில, பிற மாநில நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டும், நன்றியும்.

5. 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். அதற்கு பாராட்டுக்களை தெரிவிப்பது.

6. திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்துதல்.

தமிழ் வழிக்கல்வி

7. தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ்வழிக் கல்வியை கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துதல்.

8. அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசை கோருவது.

9. புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு கண்டனம்

10. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

11. மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது..

12. வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும், இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றியதற்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

13. விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.

14. கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட துடிக்கும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசையும், கர்நாடக அரசையும் கண்டிக்க தவறும் தமிழக அரசை கண்டிப்பது.

கச்சத்தீவு

15. கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டிக்கிறோம்.

16. நினைத்ததை முடிப்பவன் நான் என எம்.ஜி.ஆர். பாடினார். அதன்படி நினைத்ததை முடித்து சாதித்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது.

17. தமிழகத்தில் தொழில் வளத்தை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்ற தமிழக அரசை கண்டிப்பது.

18. நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்.

19. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

காவிரி-குண்டாறு திட்டம்

20. தமிழக அரசு காவிரி-குண்டாறு நதிகளின் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டு இருப்பதை கண்டிப்பது.

21. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

22. பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

23. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.

மணிப்பூர் விவகாரம்

24. மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசையும், அந்த மாநில அரசையும் வலியுறுத்துதல்.

25. அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்.

26. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

27. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்துகிேறாம்.

28. ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க.ஸ்டாலினை கண்டிக்கிறோம்.

துரோகிகள் களை எடுப்பு

29. கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு.

30. மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்துகிறோம்.

31. 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி வகுத்து தரும் திட்டங்களின்படி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.

சபதம்

32. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்-அமைச்சராக்க சபதம் ஏற்போம்.

இவ்வாறு மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story