அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா  பொதுக்கூட்டம்
x

துளசேந்திரபுரத்தில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.

திருவாரூர்

அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன், ஒன்றிய துணைச்செயலாளர் லோக அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். . நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜாமாணிக்கம், தலைமை கழக பேச்சாளர் தில்லைசெல்வம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.கே.கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story