ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதியாக மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறோம்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி


ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதியாக மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறோம்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதியாக மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறோம் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு


ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதியாக மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறோம் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

வாக்கு சேகரிக்கும் பணி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை. அதை யாராலும் தகர்க்க முடியாது.

அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் இங்கு வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைதியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு செய்து வருகிறோம்.

இரட்டை இலை சின்னம்

இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்த வரை நீதித்துறைக்கு என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீதம் பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம்.

முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story