பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்:

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை வரவேற்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

போட்டியின்றி தேர்வு

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரியும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் எனவும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கொண்டாட்டம்

இதனை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நாமக்கல்லில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் தலைமையில் மணிக்கூண்டு அருகே திரண்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சேவல்ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார், நகர அவை தலைவர் விஜய்பாபு, மாவட்ட கவுன்சிலர் ருத்ராதேவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ராசிபுரம், பள்ளிபாளையம்

ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆண்டகளூர் கேட்டில் ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் மல்லிகா சின்னதுரை, பட்டணம் பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம், பிள்ளாநல்லூர் பேரூர் செயலாளர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் முருகேசன், பாலகிருஷ்ணன், காக்காவேரி கூட்டுறவு சங்க தலைவர் கருப்புசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஸ்வா, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், பட்டணம் பழனிவேல், பிள்ளாநல்லூர் பேரூர் அவைத்தலைவர் மாணிக்கம், தினேஷ், தனபால், செல்வராஜ், பேரூர் இளைஞர் அணி செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பள்ளிபாளையம் நான்கு ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செந்தில், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மோகனூர்

மோகனூர் பேரூர், கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் செயலாளர் ராஜவடிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரூர் அவைத்தலைவர் ஆசைத்தம்பி, துணை செயலாளர் சிவஞானம், கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுதாகர், நிலவள வங்கி தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கட்சியினர் கொண்டாடினர். இதில் அண்ணா தொழிற்சங்க சர்க்கரை பிரிவு தலைவர் பாஸ்கர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி கவுதம், கூட்டுறவு சங்க இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், கார்த்தி, சரவணன் உள்பட பலர் கல்ந்து கொண்டனர்.

மோகனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்றது கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ருத்ரா தேவி, மாவட்ட பிரதிநிதி குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மேலபேட்டபாளையம் குணசேகரன், மணப்பள்ளி சின்னத்தம்பி, காளிபாளையம் ஜெயச்சந்திரன், கே.புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பரமத்தி, பொத்தனூர்

பரமத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பரமத்தி நகர செயலாளர் சுகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் நகர அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமையில் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி மற்றும் கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பொத்தனூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கபிலர்மலை ஒன்றியக்குழு தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான ரவி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story