அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா-முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு


அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா-முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பங்கேற்பு
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி எம்.எல்.ஏ., சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினர். இதேபோல் ராசிபுரம் ஒன்றியம் ஆண்டகளூர்கேட், பிள்ளாநல்லூர் பேரூராட்சி, சிங்களாந்தபுரம், காக்காவேரி ஆகிய பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் பொன்னுசாமி, சரவணன், ஆடிட்டர் நல்லியப்பன், நகர வங்கி துணைத் தலைவர் வெங்கடாசலம், இயக்குனர் சீரங்கன், வக்கீல்கள் சுரேஷ்குமார், பூபதி, நகர அவைத்தலைவர் கோபால், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுரேஷ்குமார், ராசிபுரம் ஒன்றிய பொருளாளர் மகுடீஸ்வரன், பேரூராட்சி செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் முருகேசன், பாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் மல்லிகா, முத்துசாமி, ஒன்றிய இணை செயலாளர் மாதேஸ்வரி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்புசாமி, குழந்தைவேல், கணபதி, மாவட்ட பிரதிநிதி செல்வி, ஆண்டகளூர் கேட் கணேசன், ஊராட்சி செயலாளர் சுந்தரம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பேபி பெருமாள், பிரதிநிதிகள் சீனிவாசன், ஜெகன், முன்னாள் கவுன்சிலர்கள் ஸ்ரீதர், வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story