அ.தி.மு.க. தொடர் ஜோதி ஓட்டம்


அ.தி.மு.க. தொடர் ஜோதி ஓட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:30 AM IST (Updated: 21 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அ.தி.மு.க. தொடர் ஜோதி ஓட்டத்தை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

மதுரையில் நடந்த அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 1500 வாகனங்களில் தொண்டர்கள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். இதே போன்று தூத்துக்குடி இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் மாநாட்டுக்கு நேற்று தொடர் ஓட்டமாக ஜோதி கொண்டு செல்லப்பட்டது. இதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், பகுதி கழகச் செயலாளர்கள், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story