அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்


அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகளை கிடப்பில் போட்ட தமிழக அரசை கண்டித்தும், சுரண்டை - ரெட்டைகுளம் புதிய கால்வாய் திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்தும் பாவூர்சத்திரத்தில் பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் தொகுத்து வழங்கினார். இதில் முன்னாள் எம்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து பேசினர்.

உண்ணாவிரத்தில் துணை செயலாளர்கள் பசுவதி, வீரபாண்டியன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவானந்த், ஒன்றிய செயலாளர்கள் சங்கர பாண்டியன், என்.ஹெச்.எம்.பாண்டியன், ஜெயக்குமார், இருளப்பன், பாலகிருஷ்ணன், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், கார்த்திக்குமார், கணேஷ் தாமோதரன், முத்துராஜன், ஜெயராமன், சுப்பிரமணியன், சங்கர், ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, மாணவரணி சேர்மப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் கீழப்பாவூர், கடையம், ஆலங்குளம், சுரண்டை போன்ற பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story