அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாமன்னா் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். மகளிரணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் சண்முகையா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கபட்டு, அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்த வருகை தரும் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்பட முக்கிய நிர்வாகிகளை வரவேற்பது. மாமன்னர் பூலித்தேவனுக்கு சிறப்பான முறையில் மரியாதை செலுத்துவது என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து ெகாண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச்செயலாளா் சிவஆனந்த் நன்றி கூறினார்.




Related Tags :
Next Story