தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கிய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு


தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கிய அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு
x

ஆரணியில் தனியார் நிதிநிறுவனத்துக்குள் புகுந்து மேலாளரை தாக்கிய சம்பவத்தில் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதவு செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் தனியார் நிதிநிறுவனத்துக்குள் புகுந்து மேலாளரை தாக்கிய சம்பவத்தில் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதவு செய்தனர்.

நிதி நிறுவனம்

ஆரணி காந்தி ரோடு பாரத் கேஸ் அருகாமையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் வேலூர் - ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 29). இவர் நேற்று ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆரணி கொசப்பாளையம் வேதபுரீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த ஆரணி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன் இதே தனியார் நிதி நிறுவனத்தில் வேலூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் ராகவேந்திரா என்ற பெயரில் ரூ.20 லட்சம் சீட்டு கட்டி வருகிறார்.

ஆரணி கிளையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சீட்டு கட்டி வருகிறார். கடந்த இரண்டாவது மாதம் அவர் ஏல தொகையை செலுத்தவில்லை.

இது சம்பந்தமாக கடந்த மாதம் ஊழியர்கள் ராஜா, விக்னேஷ் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று ரூ.81 ஆயிரத்து 675-ஐ பெற்று வந்தனர். இந்த மாதம் ஏல தொகைக்கான பணத்தை குன்னத்தூரில் உள்ள தனது ப்ளூ மெட்டல் நிறுவனத்திற்கு வந்து பெற்றுச் செல்லுமாறு கஜேந்திரன் நேற்று முன்தினம் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அனுப்பி விட்டார்

அதன்படி பிரசாந்த், பார்த்திபன் ஆகிய 2 வசூலாளர்கள் அங்கு சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது கடந்த மாதம் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு சென்ற வசூலாளர்கள் யார் என கேட்டுள்ளார். அப்போது ராஜா, விக்னேஷ் என்று பிரசாந்தும் பார்த்திபனும் தெரிவித்துள்ளனர். நான் இரவு 7 மணிக்கு உங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து பேசுகிறேன் என்று தெரிவித்து இருவரையும் அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் கஜேந்திரன் அடியாட்களுடன் அலுவலகத்திற்கு வந்து ஆபாசமாக பேசியுள்ளார். சம்பந்தமாக எனக்கு தகவல் தெரியவந்ததும் நான் வேலூரில் இருந்து ஆரணியில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பார்க்கும்போது என்னை கஜேந்திரன் மற்றும் அவருடன் வந்த இளையராஜா, சக்தி, பையூர் சரவணன், இரும்பேடு வேலு, சித்தேரி ஜெகன் மற்றும் சிலர் கைகளாலும், காலாலும் தாக்கி காயப்படுத்தினர்.

படுகாயம் அடைந்த நான் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என தெரிவித்து இருந்தார்.

வழக்குப்பதிவு

அதன்பேரில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் உள்பட 20 பேர் மீது ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story