அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு சிறக்க பாடுபட்ட மாவட்ட செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் பாடுபட்டு வெற்றியை ஈட்டித் தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், நகர செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.