அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பங்கேற்பு
செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
தென்காசி
செங்கோட்டை:
அ.தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் குறித்து கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி, உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story