அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
x

ஜோலார்பேட்டையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. சார்பில் 18 வார்டுகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தமிழகத்தில் மின்சார கட்டணம், பால்விலை, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், ஆதரவற்றோர்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டத்தையும் தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் தி.மு.க. அரசு திணறி வருகிறது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.சி.அழகிரி, நகர மன்ற உறுப்பினர்கள் ஏழுமலை, மங்கைசத்யா மேகநாதன், நகர அவைத் தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி வளர்மதி பார்த்தீபன், நகர மன்ற முன்னாள் கவுன்சிலர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story