அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்புரையாற்றி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள்முதல், வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் போன்ற பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றார்.
முடிவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல்லா நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட இணை செயலாளர் கீதாசுந்தர், மாவட்ட பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சேதுராமன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.