அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க. பூத் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

மதுரை

திருமங்கலம்,

கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க. பூத் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பேய்குளம், ஆவல்சூரம்பட்டி, உன்னிப்பட்டி, வெள்ளகுளம், வடக்கம்பட்டி உள்ளிட்ட கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி கூட்டத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசும் போது, இந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெறுவதன் முக்கிய காரணம் உறுப்பினர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்துவது. அ,தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தி.மு.க. அரசு அடியோடு செயல்படாமல் முடக்கப்பட்டு விட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுவதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக தேர்வு செய்வதன் மூலம் செயல்படுத்த முடியும் என்றார்.

பூத் கமிட்டி சேர்க்கை படிவத்தை கிளை நிர்வாகிகளிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கையினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமையா, பிரபுசங்கர், அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் சரவணன், சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story