அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சித்தர்க்காடு மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் செந்தமிழன் ஆகிய 4 பேர் மீதும் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story