கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகாரம் செய்தது. இதனை அடுத்து அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதன்படி கொடைக்கானலில் நகர அ.தி.மு.க. சார்பில் மூஞ்சிக்கல், அண்ணா சாலை, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவருமான எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் வி.எஸ்.கோவிந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மேல்மலை ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை, நகர அவை தலைவர் ஜான் தாமஸ், துணைச் செயலாளர் ஜாபர் சாதிக், நகராட்சி கவுன்சிலர்கள் இருதயராஜா, சுப்பிரமணி பால்ராஜ், ஜெயசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பிச்சை, முன்னாள் அவை தலைவர் வெங்கட்ராமன், மகளிர் அணி நிர்வாகி ஆண்டாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.