மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம், சிதம்பரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் அருண் மொழித்தேவன், பாண்டியன் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்தும் விருத்தாசலம், சிதம்பரத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முருகுமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் தங்கராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார். இதில் கோவை மண்டல துணை செயலாளர் வக்கீல் அருண், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, தம்பிதுரை, சின்ன ரகுராமன், வேல்முருகன், ஒன்றியக்குழு தலைவர் மேனகா விஜயகுமார், முன்னாள் நகர மன்ற தலைவர் அருள்அழகன், நகர அவைத்தலைவர் தங்கராசு, துணை செயலாளர்கள் ஆண்டாள், அரங்கமணிவண்ணன், அரசு வக்கீல் விஜயகுமார், நகர இணை செயலாளர் மலர்கொடி, நகர பொருளாளர் முக்தார் அலி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பச்சமுத்து நன்றி கூறினார்.
சிதம்பரம்
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.எம்.குமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முருகமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அருள், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிய சக்திவேல்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், மாவட்ட பொருளாளர் தோப்புசுந்தர், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லைகோபி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராஜாங்கம், அசோகன், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வாசுமுருகையன், சிவக்குமார், நகர செயலாளர்கள் எம்.ஜி.ஆர்.தாசன், கிள்ளை தமிழரசன், பூமாலைகேசவன், மாரிமுத்து, மாவட்ட மீனவர் பேரவை செயலாளர் வீராசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த், மாவட்டத் துணை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பேரவை செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.