அ.தி.மு.க. மாநாடு, கோட்டைக்கு செல்வதற்கான வெற்றி படிக்கட்டு- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. மாநாடு, கோட்டைக்கு செல்வதற்கான வெற்றி படிக்கட்டு- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
x

அ.தி.மு.க. மாநாடு, கோட்டைக்கு செல்வதற்கான வெற்றி படிக்கட்டு என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை


அ.தி.மு.க. மாநாடு, கோட்டைக்கு செல்வதற்கான வெற்றி படிக்கட்டு என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

ஆலமரம் போல்...

மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளை, கட்சியின் அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை கடந்த 1971-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தொடங்கினார். அப்போது 20 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதன்பின் ஜெயலலிதாவின் தலைமையில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 2 கோடியே 4 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செடியாக விதைக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இந்த இயக்கம், ஆலமரம் போல் வலிமையாக நின்று கொண்டு இருக்கிறது.

உலக அளவில் 6-வது மிகப்பெரும் கட்சியாகவும், தேசிய அளவில் 2-வது பெரிய கட்சியாகவும் அ.தி.மு.க. உருவெடுத்துள்ளது. அ.தி.மு.க. முதல் மாநாடு, எம்.ஜி.ஆர். தலைமையில் 1986-ம் ஆண்டு நடந்தது. அதில் நானும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கலந்து கொண்டோம். அடுத்த மாநாடு, ஜெயலலிதா தலைமையில் 1992-ம் ஆண்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த மாநாட்டிற்காக தெப்பக்குளத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மக்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது. தெப்ப க்குளத்தில் இருந்து முனிச்சாலை வரை அதிகம் பேர் திரண்டு இருந்தனர். எனவே முனிச்சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் வரை பேரணி நடந்தது. இந்த பேரணியினை சிறப்பாக நடத்தியதற்காக ஜெயலலிதா எனக்கு, தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார்.

அ.தி.மு.க. கோட்டை

தற்போது மதுரையில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு நாளை நடக்கிறது. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், மதுரை தான் அரசியல் தலைநகரம். அ.தி.மு.க. என்ற இந்த இயக்கத்தை மதுரையில் தான் எம்.ஜி.ஆர். தொடங்கினார். அதன்பிறகு அ.தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் வெற்றியும் மதுரை அருகில் உள்ள திண்டுக்கல் தேர்தல் வெற்றி தான். அதே போல் எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். மதுரையையும், அ.தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. மதுரை மட்டுமின்றி தென்மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வின் கோட்டை. இந்த கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவது தங்க கிரீடத்தில் வைக்கப்பட்ட வைர அணிகலன் போன்றது ஆகும்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அனைவரும் ஒருங்கிணைந்து செய்து இருக்கிறோம். இரவு-பகலாக பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டுமல்ல உலகளவில் இது போன்ற ஒரு மாநாடு நடைபெற வில்லை என்ற நிலையை மதுரை அ.தி.மு.க. மாநாடு எட்டும். இது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தடை போட பல வழிகளில் முயன்றும் முடியவில்லை. இந்த மாநாடு, அ.தி.மு.க. கோட்டைக்கு செல்வதற்கான முதல் வெற்றி படிக்கட்டாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story