ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர மன்ற கூட்டம்

ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்களை கடிக்கும் தெரு நாய்களை பிடிப்பது என்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ராணிப்பேட்டை பாலாறு அருகே உள்ள டாஸ்மாக் கடையினால், பல்வேறு இடையூறுகள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றது. காரியமேடை அருகே, மதுப்பிரியர்கள் மது அருந்துவதால், காரியம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மதுகுடித்து விட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள், உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் வீசி எறிவதால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு மதுக்கடையை அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக நகரமன்ற தலைவர் பதில் அளித்தார்.

உள்ளிருப்பு போராட்டம்

கூட்டம் முடிந்து தேசிய கீதம் பாடும் போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் நகர செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான சந்தோஷ் தலைமையில் தங்களுக்கு மன்றத்தில் பேச போதுமான நேரம் ஒதுக்கவில்லை என்று கூறினர். பின்னர் தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டதும், மக்கள் பிரச்சினைகளை பேச போதுமான நேரம் ஒதுக்கப்படாமல், விரைவில் கூட்டம் முடிக்கப்பட்டதால் தாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறி அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், ஜோதி சேதுராமன், முருகேசன், சுரேஷ் ஆகியோர் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும் நகராட்சி வளாகத்தில் குவிந்தனர். இதனையடுத்து ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு, நகர மன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் அங்கிருந்து புறப்பட்ட சென்றனர். இந்த போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Related Tags :
Next Story