அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்
திருநெல்வேலி
அம்பை:
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் மாதாந்திர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கிப்பாண்டியன், நிர்வாக செயல் அலுவலர் (பொறுப்பு) மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வார்டு குழு அமைத்தல், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் இதுவரை எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை, வார்டு சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்க பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தால் நிர்வாக அதிகாரி இருப்பதில்லை, பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட புதிய குடிநீர் குழாய் அமைக்க பணம் கட்ட அம்பைக்கு வங்கிக்கு அனுப்புவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story