அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகள் குழந்தையுடன் தர்ணா


அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகள்   குழந்தையுடன் தர்ணா
x

கலப்புதிருமணம் செய்ததால் போலி வாரிசு சான்று முலம் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர்

கலப்புதிருமணம் செய்ததால் போலி வாரிசு சான்று முலம் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கலப்பு திருணம்

திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர் லியோபிரான்சிஸ். இவரது மனைவி கேத்தரின்ஜார்ஜனா. 1-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவர்களுக்கு ஆலிஸ்அக்சிலியா மற்றும் எவாஞ்சலின் ரோஷினி ஆகிய மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் ஆலிஸ் அக்சிலியா வேற்று மதத்தைச்சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கொரோனா பாதிப்பின்போது லியோபிரான்சிஸ் இறந்துவிட்டார். இந்த நிலையில் கேத்தரின் ஜார்ஜினா, தனது இளைய மகளுடன் சேர்ந்து வாரிசு சான்றிதழ் வாங்கி உள்ளார். பின்னர் அதில் முதல் மகள் ஆலிஸ்அக்சிலியா பெயரை நீக்கி போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்துள்ளார்.

பத்திரப்பதிவு

அதன் மூலம் திருப்பத்தூர் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி மற்றும் ஆவல் நாயக்கன்பட்டி பகுதியில் லியோபிரான்சிஸ் பெயரில் இருக்கும் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தனியார் வங்கியில் ரூ.30 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.

இதனையறிந்த மூத்த மகள் அலிஸ் ஆக்சிலியா மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கேத்தரினா ஜார்ஜினா, எவாஞ்சலின் ரோஷினி பெயரில் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார்.

தர்ணா போராட்டம்

இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மாதம், மாதம் பலமுறை வரவழைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நான்கு மாத கை குழந்தையுடன், பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து, கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story