சிட்லப்பாக்கம் ஏரியை புனரமைக்க கோரி அ.தி.மு.க. மனித சங்கிலி போராட்டம்


சிட்லப்பாக்கம் ஏரியை புனரமைக்க கோரி அ.தி.மு.க. மனித சங்கிலி போராட்டம்
x

சிட்லப்பாக்கம் ஏரியை புனரமைக்க கோரி அ.தி.மு.க. மனித சங்கிலி போராட்டம்.

சிட்லபாக்கம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரியை, ரூ.25 கோடியில் புனரமைக்க திட்டமிடப்பட்டு 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. அதன்படி ரூ.19 கோடியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தவும், ரூ.6 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இன்னும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியது உள்ளது. ஏரியில் 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் அதன் பிறகு சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடபட்டதாக தெரிகிறது.

எனவே சிட்லப்பாக்கம் ஏரியை புனரமைக்க கோரி நேற்று மாலை அ.தி.மு.க. சார்பில் சிட்லப்பாக்கத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா, முன்னாள் எம்.பி.கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தன்சிங், கணிதா சம்பத், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிட்லபாக்கம் மோகன், ஜெயபிரகாஷ், அனகை வேலாயுதம் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டு சிட்லபாக்கம் ஏரியை புனரமைக்க கோரி கோஷமிட்டனர்.


Next Story