அ.தி.மு.க. மாநாட்டை வலியுறுத்தி வந்த தொடர் ஜோதி ஓட்டத்திற்கு உற்சாக வரவேற்பு


அ.தி.மு.க. மாநாட்டை வலியுறுத்தி வந்த தொடர் ஜோதி ஓட்டத்திற்கு உற்சாக வரவேற்பு
x

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டை வலியுறுத்தி கரூருக்கு வந்த தொடர் ஜோதி ஓட்டத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர்

உற்சாக வரவேற்பு

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஜோதி ஓட்டம் நேற்று கரூர் மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையம் வந்தடைந்தது.

தொடர்ந்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, மண்மங்கலம், செம்மடை, வெங்கமேடு வழியாக கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதிக்கு வந்தது. அப்போது கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொடர் ஜோதி ஓட்டத்திற்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பங்கேற்றவர்கள்

இதனைத்தொடர்ந்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சின்னசாமி ஆகியோர் எழுச்சி மாநாட்டின் பிரசார வாகனத்தையும், தொடர் ஜோதி ஓட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், மாநகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர செயலாளர் விவேகானந்தன், ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், கவுன்சிலர்கள் சுரேஷ், ஆண்டாள் தினேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story