அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் கார்கள் அடுத்தடுத்து மோதல்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் கார்கள் அடுத்தடுத்து மோதல்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பசும்பொன்னுக்கு செல்லும் வழியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மானாமதுரை வைகை ஆற்று பாலத்தில் அடுத்தடுத்து மோதிக்ெகாண்டன. இதில் ஆதரவாளர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை

மானாமதுரை,

பசும்பொன்னுக்கு செல்லும் வழியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மானாமதுரை வைகை ஆற்று பாலத்தில் அடுத்தடுத்து மோதிக்ெகாண்டன. இதில் ஆதரவாளர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.

கார்கள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று நடந்த முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவுக்கு செல்ல அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கார்கள் சென்றன.

மானாமதுரை வைகை ஆற்று பாலத்தை கடக்க முயன்றபோது திடீரென முன்னே சென்ற கார் பிரேக் பிடித்த போது அதற்கு பின்னால் வந்த முன்னாள் அமைச்சர்களின் கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.

4 பேர் காயம்

இதில் சில கார்களின் முன்பகுதி சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில் காரில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் காயமின்றி தப்பினர். மேலும் அந்த கார்களில் இருந்த ஆதரவாளர்கள் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதைதொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேறு காரில் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து அறிந்ததும் மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story