அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர் திடீர் தற்கொலை முயற்சி


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில்  தேடப்பட்டு வந்தவர்  திடீர் தற்கொலை முயற்சி
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சத்தியமங்கலம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சத்தியமங்கலம் அருகே திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல்

புஞ்சைபுளியம்பட்டி புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தி ரூ.1 கோடியே 50 லட்சத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் அளித்த புகாரின்பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி உக்கரம் பகுதியை சேர்ந்த கர்ணன் (வயது 42), கோவை மாவட்டம் அன்னூர் கொண்டையம்பாளையத்தை சேர்ந்த தர்மலிங்கம் (47), சத்தியமங்கலம் கெஞ்சனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49), கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த பிரைட்பால் (40), திருப்பூர் மாவட்டம் அவினாசி திருவள்ளுவர் வீதியை சேர்ந்த கண்ணன் (45) ஆகிய 5 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

தற்கொலைக்கு முயற்சி

மேலும் இந்த வழக்கில் சிலரை போலீசார் வவைவீசி ேதடி வந்தனர்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரபரப்பு

முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரவணன் எழுதி வைத்திருந்ததாக சில கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வந்தவரான சரவணன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சத்தியமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story