அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், இணை செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுடலை வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவ சீதாராம், ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வக்கீல் அணி மாவட்ட துணைத் தலைவர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.



Next Story