அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
அச்சன்புதூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் அச்சன்புதூரில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீ.கருப்பசாமி பாண்டியன், தலைமை கழக பேச்சாளர்கள் செல்வம், குணசேகரன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆய்க்குடி செல்லப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story