அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவா் வீ.பி.மூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளா் சண்முகப்பிரியா, துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் கணேசன் வரவேற்றார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீ.கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சா் வீ.எம்.ராஜலட்சுமி, தலைமை கழக பேச்சாளா் குமுதா பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச்செயலாளா் சிவஆனந்த், அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் மண்டல செயலாளா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் பரமகுருநாதன், மாவட்ட மீனவரணி செயலாளா் ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.