அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

சாயல்குடியில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடியில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சாயல்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கமுதி காளிமுத்து, கடலாடி முனியசாமி பாண்டியன், கடலாடி ஒன்றிய குழுத் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரையா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நவஜோதி பிரவீன் குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், சாயல்குடி ஒன்றிய அவைத்தலைவர் செய்யதுஅகமது, நகர் அவைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயல்குடி நகர் செயலாளர் ஜெயபாண்டியன் வரவேற்றார். ராமநாதபுரம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, தலைமை கழக பேச்சாளர் மதுரை இளவரசன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நிறைகுளத்தான், முதுகுளத்தூர் நகர செயலாளர் சங்கர பாண்டியன், விவசாய அணி இணைச்செயலாளர் கர்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அமிர்த பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் செய்யது காதர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், சாயல்குடி பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் சேகர், செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பால்பாண்டியன், பிள்ளையார்குளம் கூட்டுறவு சங்க துணை தலைவர் கதிரேசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய இளைஞர் பாசறைச்செயலாளர் அரச பாண்டியன், சாயல்குடி வீட்டு வசதி சங்க தலைவர் சன் ஜெயராமன், ஊராட்சித் தலைவர்கள் கவிதா, வீரபாண்டியன், சாந்தி முனியசாமி, பாலகிருஷ்ணன், பீர்முகம்மது, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி, கிளைச் செயலாளர்கள் அழகர், செந்தூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story