அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விழா


அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விழா
x

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விழா நடைபெற்றது

மயிலாடுதுறை

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல். ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர் போகர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story