மணப்பாறை நகராட்சியில் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
மணப்பாறை நகராட்சியில் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை நகராட்சியில் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கூட்டம்
மணப்பாறை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் கீதா.ஆ.மைக்கேல்ராஜ், ஆணையர் சியாமளா தேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மணப்பாறை நகராட்சிப் பகுதிகளில் காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்றும், மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது எனவும், அது போதுமானதாக இல்லை எனவும், இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைவதாகவும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
தர்ணா
காவிரி குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.