கடுமையாக உழைத்து அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்


கடுமையாக உழைத்து அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.முனிசாமி, மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஒன்றிய துணை செயலாளர் எஸ்.பாரதிதாசன் வரவேற்றார்.

இதில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளருமான செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

அப்போது, வேலூர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக யாரை தலைமையால் நிறுத்தப்படுகிறார்களோ அவருக்கு நாம் கடுமையான உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதற்கான தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற முடியும் என்றார்.

கூட்டத்தில் மேற்கு ஒன்றிய நிர்வாகிகளான இணை செயலாளர் கலைவாணி, பொருளாளர் சாமுடி, மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், துணை செயலாளர் மும்தாஜ் ரபிக், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பிரதிநிதி லீலாவதி சிவானந்தம் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story