அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அரக்கோணம் நகரத்துக்கு உட்பட்ட சோமசுந்தரம் நகர், ஜெய்பீம் நகர், ஏ.பி.எம். சர்ச் பகுதி, புதுப்பேட்டை, பழனிப்பேட்டை, விண்டர்பேட்டை, உப்பரபாளையம், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் தாலுகா அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story