கீழப்பாவூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
கீழப்பாவூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியச்செயலாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் யூனியன் கவுன்சிலர் சரவணன், மாநில பேச்சாளர்கள் அப்பாத்துரை, மதியழகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முத்துமாரி, வேல்செட்டியார், இசக்கியம்மாள், சுடலீசன், விஜயராமஆனந்த், பலவேசம், மணிகண்டன், கருப்பையா, சுந்தர்ராஜ், முருகேசன், கருப்பசாமி, வேல்சாமி, கோபால்செட்டியார், ஆறுமுகநயினார், தங்கராஜ், கதிரேசன், ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுதர்சன் நன்றி கூறினார்.