இலுப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


இலுப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

இலுப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சின்ன கடைவீதி எம்.ஜி.ஆர். திடலில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மேடையில் வண்ண மலரால் அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், அ.தி.மு.க. மக்களை நேசிக்கிற கட்சி, தொண்டர்களால் இயங்குகின்ற கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் வாரிசு அரசியலை மையமாக வைத்து இயங்கிற இயக்கம். தி.மு.க. ஆட்சியின் மீது பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினர், காவல்துறையினர், ஏன் சொல்லப்போனால் தி.மு.க.வினரே ஆட்சியின் மீது அதிருப்தில் இருக்கிறார்கள். மின் கட்டணம், சொத்து வரி, பால்விலை உயர்ந்துள்ளது. பெண்களுக்கான ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம் மற்றும் மடிக்கணினி நிறுத்தப்பட்டிருக்கிறது. திருமணம் ஆகும் பெண்களுக்கு கொடுக்கப்படும் ரூ.50 ஆயிரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இலுப்பூரில் அ.தி.மு.க. ஆட்சியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட இலுப்பூர் அரசு மருத்துவ மனையில் இரவு நேரத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாமலும், பகல் நேரத்தில் 9 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே பணிக்கு வந்து கொண்டிருக்கிறார் என்றார். இதில் அ.தி.மு.க. மாவட்ட. ஒன்றிய. கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story