தூத்துக்குடியில் அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டியில் அந்தந்த வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ளவரை நியமிக்க வேண்டும். ஒரே குடும்பத்தினரை நியமிக்க கூடாது. பூத் கமிட்டியில் 19 பேரும், மகளிர் குழுவில் 25 பேரையும், இளைஞர், இளம்பெண்கள் பாசறை குழுவில் 25 பேரையும் சேர்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும். எனவே, கட்சியினர் கூட்டணி பற்றி எதுவும் பேசக்கூடாது. பா.ஜனதா அ.தி.மு.க.வின் விமர்சித்து பேச வேண்டாம்' என்று கூறினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை் உள்பட பலர் கலந்து கொண்டனர்.