வள்ளியூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வள்ளியூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சொத்துவரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்தி தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ஏழை-எளிய மக்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. எனவே விரைவில் இந்த விடியா தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த வேலையை செய்து முடிப்பார்கள்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், செழியன், சுந்தர், அருண் குமார், பொன்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story