அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை


அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
x

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோயம்புத்தூர்

கோவ

கோவையில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.தி.மு.க. சார்பில் வெளிவரும் நாளேட்டின் வெளியீட்டாளராகவும் உள்ளார். மேலும் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அவர் காண்டிராக்டராகவும் உள்ளார். இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் வடவள்ளியில் உள்ள அவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது சந்திர சேகர் வீட்டில் இல்லை. சென்னை சென்று இருந்தார். சந்திரசேகரின் வீட்டு கதவுகள் அடைக்கப்பட்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. இந்த சோதனையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் பறிமுதல்

அப்போது சந்திரசேகரின் குடும்பத்தினரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது தொழில் மற்றும் வருமானம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கோவையில் உள்ள அவரது பெற்றோர், தம்பி, சகோதரி வீடுகள் மற்றும் சந்திரசேகருக்கு நெருக்கமான பொக்லைன் காண்டிராக்டரின் வீடு, கோவை பீளமேட்டில் உள்ள அலுவலகம் உள்பட மொத்தம் 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திஆவணங்களை கைப்பற்றினர். சோதனை நடந்து கொண்டு இருந்தபோதே அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் ஒரு சில அதிகாரிகள் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வாகனத்தில் ஏறி சென்றனர். மற்ற அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இரவு 7 மணியை தாண்டியும் சோதனை நடைபெற்று வந்தது.

பரபரப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் பரபரப்பான நிலையை எட்டி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story