அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்


அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். முன்னதாக அலுவலகம் எதிரே உள்ள அண்ணா, எம.்ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஒன்றிய செயலாளர் அய்யாத் துரை பாண்டியன், அன்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கடம்பூர் ராஜூ கூறுகையில், அ.தி.மு.க. பொது செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முதற்கட்டமாக உறுப்பினர் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜனதா பிரமுகர் மீது நேற்றுமுன்தினம் இரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்குள் நீக்கத்தை மாற்றியுள்ளனர். இதை அந்தகட்சி தலைமை கவனித்துக் கொண்டிருக்கிறது. இதுவிசயத்தில் அவர்கள் முடிவு செய்வார்கள். கொள்கை என்பது வேறு, பா.ஜ.கவுடன் கூட்டணி என்பது வேறு, என்றார்.


Next Story