அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி


அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி
x
தினத்தந்தி 6 March 2024 5:29 AM GMT (Updated: 6 March 2024 5:34 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இணைந்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளது. ஏற்கனவே அந்த அணியில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இணைந்துள்ளது. சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு தேனி, ராமநாதபுரத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.


Next Story