அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தூசி கிராமத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூசி
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. வளர்ச்சி பொன்விழா மதுரையில் நடைபெறுவது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.திருமூலன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், மதுரையில் நடைபெறும் விழாவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் 213 வேன்கள் மற்றும் 40 பஸ்களில் சென்று கலந்து கொள்வார்கள் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை, வெம்பாக்கம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோமதி ரகு, ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், அனக்காவூர் அரங்கநாதன், சி.துரை, நகர செயலாளர் வெங்கடேசன், வயலூர் வி.ராமநாதன், நமண்டி இ.பாலன், கே.குமரேசன், ஏழாச்சேரி பாஸ்கரன், வெற்றிசெல்வம், கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.